டைமண்ட் லீக் தடகள போட்டி ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 2-ஆவது இடம் பிடித்தார்.
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெற்று வரும் டைமண்ட் லீக் தடகள போட்டியில் முன்னனி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றதில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 85.71 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து இரண்டாம் இடம் பிடித்தார். செக்குடியரசின் ஜாகுப் வாட்லெஜ் 85.86 மீட்டர் தூரம் வீசி முதல் இடம் பிடித்தார்.
கடந்த வாரம் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.